கோவையில் அமமுகவினர் மீது தாக்குதல்?: கார் கண்ணாடி உடைப்பால் பரபரப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோவையில் அதிமுகவினர் தங்களது கார் கண்ணாடிகளை உடைத்து, ‌தாக்குதல் நடத்தியதாகக் கூறி அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


Advertisement

முன்னாள் எம்.எல்.ஏ.வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோவை தெற்கு மாநகர மாவட்ட செயலாளருமான சேலஞ்சர் துரை தலைமையில் கோவை வடவள்ளியில் அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்து சேலஞ்சர் துரை உட்பட அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர்கள் ஓணாப்பாளையம் சாலை அருகே வந்துக்கொண்டிருந்தபோது, அதிமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திரசேகர், அன்பு ஆகியோர் ஆதரவாளர்களுடன் வந்து பிரச்னையில் ஈடுபட்டதாகவும், கார் கண்ணாடிகளை கல்லால் அடித்து நொறுக்கியதாகவும் கூறப்படுகிறது. கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதுடன், நிர்வாகிகள் தாக்கப்பட்டதாகவும் கூறி அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


Advertisement

இந்த கூட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபம், அதிமுகவை சேர்ந்த மாவட்ட அமைச்சரின் உத்தரவுப்படி, கடைசி நேரத்தில் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அதிமுகவினரின் இந்த தாக்குதலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் மறியலின் போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து ‌போராட்டம் கைவிடப்பட்டது. சம்பவம் தொடர்பாக வடவள்ளி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement