கர்நாடகா, கோவாவை தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்திலும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி உரிமை கோருகிறது.
கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்ததை அடுத்து காங்கிரஸ் தலைமை புதிய வியூகத்தை அமைத்துள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதும் ஆட்சி அமைக்க தவறிய மாநிலங்களில் போர்க்கொடி உயர்த்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதன்படி, கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்தது. அதேபோல், ஆளுநருக்கு எதிராக போராட்டங்களை நடத்தவும் காங்கிரஸ் கட்சியினருக்கு தலைமை உத்தரவிட்டுள்ளது.
தற்போது, கோவா மாநிலத்தை தொடர்ந்து, மணிப்பூர், மேகாலய மாநிலங்களில் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் ஆட்சி அமைக்க கோரவுள்ளது. மணிப்பூர் காங்கிரஸின் இபோபி சிங்கும் நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார். மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கு கடந்த ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 28 இடங்களிலும், பாஜக 21 இடங்களிலும், நாகாலாந்து மக்கள் முன்னணி 4 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 4 இடங்களிலும், லோக் ஜனசக்தி, திரிணாமுல் காங்கிரஸ், சுயேச்சை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர்.
பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவை என்ற நிலையில் 28 இடங்களை வென்ற காங்கிரஸைத் தாண்டி, 4 இடங்களைப் பெற்ற நாகாலாந்து மக்கள் முன்னணி, 4 இடங்களைப் பெற்ற தேசிய மக்கள் கட்சி, ஒரு இடத்தைக் கொண்ட லோக் ஜனசக்தி ஆகியவற்றோடு தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை பாஜக அமைத்தது. இதனையே ஆளுநரும் பதவியேற்க அழைத்தார். இதன் மூலம் மணிப்பூர் வரலாற்றின் முதல் பாஜக முதல்வராக பிரேன் சிங் பதவியேற்றார்.
மேகாலயாவில் கடந்த பிப்ரவரி மாதம் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 19 இடங்களிலும், பிற கட்சிகள் 14 இடங்களிலும் சுயேட்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இங்கு பாஜக வென்ற தொகுதிகள் 2 மட்டும்தான். ஆட்சிப் பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவை என்ற நிலையில், 21 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரசைத் தாண்டி, 19 இடமுள்ள தேசிய மக்கள் கட்சி, 6 இடமுள்ள ஒருங்கிணைந்த ஜனநாயகக் கட்சி, 4 இடமுள்ள மக்கள் ஜனநாயக முன்னணி, 2 இடமுள்ள தேசிய மலைவாழ் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றை ஒருங்கிணைத்து 31 இடங்களைக் கொண்ட ஒரு பெரிய 'தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி'யை உருவாக்கியது பாஜக.தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியில் பெரியது - என்ற அடிப்படையில் இந்தக் கூட்டணியையே ஆளுநர் அழைக்க மேகாலயாவில் பாஜக கூட்டணி அங்கு ஆட்சியைப் பிடித்தது.
தற்போது கர்நாடக ஆளுநர் எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்ததை சுட்டிக் காட்டியே கோவா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் காங்கிரஸ் போர்க் கொடி உயர்த்தியுள்ளது. அதேபோல், பீகாரில் தனிப்பெரும் கட்சியாக உள்ளதால், ஆட்சி அமைக்க உரிமை கோர ராஷ்டிரிய ஜனதா தளம் முடிவு செய்துள்ளது. 80 எம்.எல்.ஏக்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்துசெல்ல உள்ளதாக, அந்தக் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார்.
Loading More post
குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முக்கியச் செய்திகள்: அச்சுறுத்தும் கொரோனா 2-ம் அலை முதல் சென்னை அணியின் வெற்றி வரை
தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்