நீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கர்ணன் புதிய கட்சியைத் தொடங்கி உள்ளார். ஊழலுக்கு எதிரான கட்சி என்றும் பெயரை அறிவித்துள்ளார்.


Advertisement

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஊழலுக்கு எதிரான கட்சி என்ற தனது கட்சியின் பெயரை அவர் அறிவித்தார். வரும் 2019 மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார்.மனித உரிமை அமைப்புகள் மாநாட்டில் பங்கேற்ற அவர், மக்களவை தேர்தலில் பெண் வேட்பாளர்களை மட்டும் களத்தில் இறக்க உள்ளதாக தெரிவித்தார். கட்சியை முறைப்படி தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யஇருப்பதாகவும் கர்ணன் தெரிவித்தார். நாட்டிலிருந்து ஊழலை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதே தனது கட்சியின் நோக்கம் எனக் கூறினார். தலித்துகளையும், சிறுபான்மையினரையும் மத்திய, மாநில அரசுகள் காக்க வேண்டும் எனவும் கர்ணன் கேட்டுக் கொண்டார். 

நீதிபதி கர்ணனின் புதிய கட்சியின் பெயர்  Anti Corruption Dynamic Party  (ACDP).


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement