ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மம்மூட்டி, அஞ்சலி, சாதனா, சமுத்திரக்கனி, திருநங்கை அஞ்சலி அமீர், சுராஜ் வெஞ்சரமூடு உட்பட பலர் நடித்துள்ள படம், ‘பேரன்பு’. ராம் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்ரீராஜலட்சுமி பிலிம்ஸ் சார்பில் பி.எல்.தேனப்பன் தயாரித்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு
செய்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.


Advertisement

தமிழ், மலையாளத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கார் ஓட்டுனராக மம்மூட்டி நடித்துள்ளார். ஷூட்டிங் முடிந்துவிட்டது. தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு முன், திரைப்பட விழாக்களில் இதை திரையிட முடிவு செய்துள்ளனர். அதன்படி, 47-வது சர்வதேச ராட்டர்டேம் (நெதர்லாந்து) திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது. 


Advertisement

187 உலக திரைப்படங்கள் போட்டியிட்ட இங்கு, பார்வையாளர்கள் விருதுக்கான பிரிவில் முதல் 20 திரைப்படங்களில் இடம்பெற்ற ஒரே இந்தியத் திரைப்படம் இது என்ற சிறப்பை பெற்றது. இந்தப் படம் இப்போது, ஜூன் 16 முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ள 21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவுக்குத் தேர்வாகியுள்ளது. அங்கு, ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சியாகத் திரையிடப்பட இருக்கிறது. இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளிவர இருக்கிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது. 
 

loading...

Advertisement

Advertisement

Advertisement