கர்நாடக மாநிலத்தில் கடந்த 40 ஆண்டுகளில் முழுமையாக 5 வருட ஆட்சியை பூர்த்தி செய்யும் முதலமைச்சர் என்ற பெருமையை சித்தராமையா பெற்றுள்ளார். கடந்த காலங்களில் யார் யாரெல்லாம் ஆட்சி புரிந்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
கர்நாடகா மாநிலம் இதுவரையில் 19 அரசுகளையும், 4 முறை குடியரசுத் தலைவர் ஆட்சியையும் சந்திததிருக்கிறது. 1972 முதல் 1977 வரையில் காங்கிரஸை சேர்ந்த தேவராஜ் அர்ஸ் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். காங்கிரஸ்காரரும், பிரபல பேட்மிண்டன் வீரருமான குண்டு ராவ் 1980 முதல் 1983 வரை முதலமைச்சராக இருந்தார். 1983 முதல் 1988 ஆம் ஆண்டு வரை, ஜனதா கட்சியைச் சேர்ந்த ராமகிருஷ்ணா ஹெக்டே முதலமைச்சராக இருந்தார். காங்கிரஸ் கட்சியைச் சேராத ஒருவர் கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக முதன்முறையாக பதவி வகித்தவர் ராமகிருஷ்ணா ஹெக்டே ஆவார். 1988 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 1989 ஏப்ரல் வரை, ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எஸ்.ஆர்.பொம்மை முதல்வராக இருந்தார். அப்போது ஜனதா கட்சியும் லோக் தளம் கட்சியும் இணைந்து ஆட்சியை பிடித்தது. எஸ்.ஆர். பொம்மையால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனதால், ஆளுநர் பரிந்துரையின் பேரில் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர், உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ஆளுநரின் அதிகாரம் குறித்து முக்கிய தீர்ப்பை வழங்கியது. இது அரசியல் வரலாற்றில் இன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
1989 நவம்பர் முதல் 1990 அக்டோபர் வரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வீரேந்திர பாட்டீலும், 1990 அக்டோபர் முதல் 1992 நவம்பர் வரையில், பங்காரப்பாவும் முதலமைச்சராக இருந்தனர். 1992 நவம்பர் முதல் 1994 டிசம்பர் வரையில் மூத்த காங்கிரஸ் தலைவரான வீரப்ப மொய்லி முதல்வராக பதவி வகித்தார். 1994 டிசம்பர் முதல் 1996 மே வரை, ஜனதா தளம் கட்சியின் ஹெச்.டி. தேவே கவுடா முதல்வராக இருந்தார். 1996ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் எதிர்பாராதவிதமாக மூன்றாவது அணியின் சார்பில் தேவே கவுடா பிரதமராக தேர்வு செய்யப்பட்ட, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஜே.ஹெச். பாட்டீல் 1996 மே மாதம் முதல் 1999 அக்டோபர் மாதம் வரையிலும், 1999 முதல் 2004 வரை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் முதல்வராக இருந்தனர்.
மதச்சார்பற்ற ஜனதா தளமும் - காங்கிரஸ் கட்சியும் இணைந்து முதல் முறையாக கூட்டணி ஆட்சியை அமைத்தன. அதன்படி, 2004 மே மாதம் முதல் 2006 ஜனவரி வரை தரம் சிங் முதல்வராக இருந்தார். 2006 பிப்ரவரி முதல் 2007 அக்டோபர் வரை, ஜனதா தளம் கட்சியின் ஹெச்.டி. குமாரசாமி முதல்வராக இருந்தார். 2007 நவம்பர் முதல்2008 மே வரை குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. அதன்பிறகு, 2008 மே மாதம் முதல் 2011 ஜூலை வரை, பா.ஜ.க.வின் எடியூரப்பா முதலமைச்சராக பதவி வகித்தார். 2011ஆகஸ்ட் முதல் 2012 ஜூலை வரையில் சதானந்த கவுடா முதல்வராகவும், 2012 ஜூலை முதல் 2013 மே வரை ஜெகதீஷ் ஷட்டர் முதலமைச்சராகவும் இருந்தார். 2013 முதல் முதல்வராக இருந்து வரும் சித்தராமையா, அம்மாநிலத்தில் கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக 5 ஆண்டுகால ஆட்சியை பூர்த்தி செய்யும் முதல் முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
Loading More post
மேற்கு வங்க தேர்தல்: பரப்புரை தடையை எதிர்த்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்
”மேற்கு வங்கத்தில் பாஜகவை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது; ஆனால்...!” - பிரசாந்த் கிஷோர்
கேரளாவில் இருந்து தமிழகம் வர இ பாஸ் கட்டாயம்: எல்லையில் சோதனையை தீவிரப்படுத்தும் போலீசார்!
அதிகரிக்கும் கொரோனா: 10 மாநிலங்களில் உயர்மட்ட குழுக்களை களமிறக்க மத்திய அரசு திட்டம்!
இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!