கர்நாடக தேர்தல்: சித்தராமையா தோல்வி - காங்கிரஸும் வீழ்ந்தது!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சாமுண்டேஸ்வரி தொகுதியில் சித்தராமையா தோல்வி அடைந்தார். 


Advertisement

கர்நாடக சட்டப்பேரவையின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இதில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. ஆரம்பத்தில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. பின்னர் பாஜகவின் கை ஓங்கியது. பின்னர் தொடர்ந்து பாஜகவே முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜக 114 தொகுதிகளிலும், காங்கிரஸ் 64 தொகுதிகளிலும், மஜத 42 தொகுதிகளிலும், மற்றவை 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.


Advertisement

காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். அதில் ஒரு தொகுதியான சாமுண்டேஸ்வரி தொகுதியில் சித்தராமைவிற்கும், மஜத வேட்பாளர் ஜி.டி தேவகவுடாவிற்கும் இடையே போட்டி நிலவியது. ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வந்த கவுடா தற்போது வெற்றி பெற்றுள்ளார். சித்தராமையாவை விட 19 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று கவுடா வெற்றி பெற்றுள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவாக மாறியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement