தைலமரத்தை ஒழிக்க குழந்தைகள் மற்றும் மாணவர்கள் குடையுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு வனத்துறை மற்றம் தனியார் சார்பில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் தைலமரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்தத் தைலமரத்தால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்றும் நிலத்தடி நீர் மட்டுமல்லாமல் காற்றின் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சுகிறது என்றும் பரவலாக பொதுமக்கள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் இந்தத் தைலமரத்தால் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்டம் முழுவதும் மழையில்லாமல் கடும் வறட்சி நிலவுகிறது என்றும் கூறப்படுகிறது.
இதனால் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக இந்தத் தைலமரத்தை அழித்துவிட்டு பல்உயிர்காடுகளை வளர்க்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் மூலம் இணைந்த இளைஞர்கள் ‘பிறந்த ஊருக்கு புகழைச்சேரு’ என்று ஒரு குழுவை உருவாக்கி கடந்த ஒரு வார காலமாக புதுக்கோட்டை இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை ஒன்றிணைத்தனர். பின்னர் புதுக்கோட்டை மாவட்ட வறட்சிக்கு காரணமாக உள்ள தைலமரத்தை ஒழிக்க அரசு நடவடிக்கை வைக்க வேண்டும் என்று ஒரு மனதாக முடிவெடுத்து, தங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் மாணவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குடையுடன் அழைத்து வந்தனர்.
மற்ற மாவட்டங்களில் மழைக்காக குடைப்பிடித்து செல்கின்றனர். எங்கள் மாவட்டத்தில் தைலமரத்தால் வெயிலுக்காக குடைப்பிடித்து செல்லும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றனர். அங்கு ஆட்சியர் இல்லாததால் மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமியிடம் அவர்கள் மனு கொடுத்தனர். தைலமரத்தை ஒழிக்க குழந்தைகள் மற்றும் மாணவர்கள் குடையுடன் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்காக குரல் கொடுத்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.
Loading More post
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
தென்காசி: பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை... 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
"வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மகனுக்கு உத்தரவிடுங்கள்"-மோடியின் தாய்க்கு விவசாயி கடிதம்
“சி.எஸ்.கே-வில் வீரர்களை தக்கவைத்தது தான் தோனியின் ஸ்பெஷாலிட்டி” - கவுதம் காம்பீர்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!