மணிரத்னத்தின் ‘சிசிவி’ படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் விடைபெற்றுள்ளார்.
வெளிவர இருக்கும் மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த வாய்ப்பு முதன்முறையாக அவருக்கு கிடைத்திருப்பதால் அவர் அளவுக்கு அதிகமான மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகவேகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் படத்தை இயக்க திட்டமிட்டுள்ள மணிரத்னம் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக துபாய் செல்ல இருக்கிறார்.
இந்நிலையில் இதில் ஐஸ்வர்யா ராஜேஷின் காட்சிகள் முழுமையாக படப்பிடிப்பு செய்யப்பட்டுவிட்டது. அவரது பகுதியை முடித்துக் கொடுத்துள்ள ஐஸ்வர்யா அது சம்பந்தமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில்,“ என்னுடைய பகுதி முடிந்துவிட்டது. மணிரத்னம் சாருடன் வேலை செய்தது என்ன ஒரு அற்புதமாக அனுபவம்? இது என் வாழ்நாள் கனவு. தாங் யூ சோ மச் சார்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தை ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ மற்றும் ‘லைகா புரொடக்ஷன்’ இணைந்து தயாரிக்கிறது. இதில் சிம்பு, அரவிந்த் சாமி, விஜய்சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது. படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
Loading More post
மார்ச் 10-ல் வெளியாகிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல் : மு.க.ஸ்டாலின் தகவல்
"சுப்மன் கில் சரியாக விளையாட முடியாததற்கு இதுதான் காரணம்"-சுனில் கவாஸ்கர்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் உயிரிழப்பு
தமிழகத்தில் ராகுல் பரப்புரைக்கு தடை கேட்கும் பாஜக
'எந்த தொகுதியிலும் நிற்கத் தயார்..' விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை