நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து விசாரணை நடத்தக்கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உறவினர் திருமணத்தில் பங்கேற்க துபாய் சென்ற ஸ்ரீதேவி ஹோட்டலில் தங்கியிருந்த போது குளியல் தொட்டியில் தவறி விழுந்து பிப்ரவரி 24-ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் சுனில் சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி தாமாக விழுந்தாரா என்பதில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் ஸ்ரீதேவியின் உயரம் 5.7 அடி என்றும் குளியல் தொட்டி 5 அடி மட்டுமே கொண்டது என்றும் அவர் தமது மனுவில் கூறியுள்ளார். ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று சுனில் சிங் கோரியிருந்தார். அவரது மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தள்ளுடி செய்தது. இதுபோன்ற மனுவை விசாரிக்க விரும்பவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” - மருத்துவமனை விளக்கம்
பிரான்ஸுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம்... டிஎல்பி கட்சிக்கு 'அஞ்சும்' இம்ரான் அரசு!
உ.பி: ஞாயிறுகளில் ஊரடங்கு; முகக்கவசம் அணியாமல் 2-ம் முறை சிக்கினால் ரூ.10,000 அபராதம்
விலை வீழ்ச்சியால் வேதனை: ஏரியில் தக்காளியை கொட்டும் கிருஷ்ணகிரி விவசாயிகள்!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்