25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வேண்டுமென்றால் நீட் தேர்வு எழுதுவது அவசியம். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வயது வரம்பை இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் 25 வயதுக்கு அதிகமாக இருந்தால் நீட் தேர்வை எழுத முடியாது. இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் 30 வயதுக்கு இருந்தால் நீட் தேர்வை எழுத முடியாது. ஆனால் நடந்து முடிந்த நீட் தேர்வை வயது வரம்பு இல்லாமல் அனைவருமே விண்ணப்பித்து தேர்வு எழுதியிருந்தனர். இதனிடையே, நீட் தேர்வின் வயது வரம்பு குறித்த இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவிப்பை எதிர்த்து கேளராவை சேர்ந்த இருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவிப்பை உறுதி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பொதுப்பிரிவில் 25 வயதிற்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத முடியாது. இடஒதுக்கீட்டு பிரிவில் 30 வயதிற்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத முடியாது.
முன்னதாக நீட் வயது உச்சவரம்பு தொடர்பான மருத்துவ கவுன்சிலின் அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பலர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அப்போது மருத்துவ கவுன்சிலின் முடிவில் தலையீடு முடியாத என தெரிவித்த உச்சநீதிமன்றம், வேண்டுமென்றால் இதுபோன்ற வழக்குகளுக்கு உயர்நீதிமன்றத்தை நாடலாம் என தெரிவித்தது. அதனைத்தொடர்ந்து மருத்துவ கவுன்சிலின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேளராவை சேர்ந்த இருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.
Loading More post
நீடிக்கும் தொகுதிப் பங்கீடு இழுபறி... விசிகவுக்கு தனிச் சின்னமா? திமுக சின்னமா?
பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதால் சிறு கட்சிகளுக்கு ஏற்படும் சாதக பாதகம் என்ன? ஓர் அலசல்
'கோவாக்சின் 81% செயல்திறன் கொண்டது..' ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்
பெட்ரோல், டீசல் வரியை லிட்டருக்கு ரூ. 8.50 வரை தாராளாமாக குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?