திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ6 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இயங்கி வருகிறது. வாரத்தின் முதல்நாள் என்பதால் காலை முதலே வாடிக்கையாளர்கள் அதிகளவில் இருந்தனர். மதியம் உணவு இடைவேளைக்கு பின்னர் வங்கியில் கூட்டம் சற்று குறைவாக இருந்தது. இந்த வேளையில் சுமார் 5பேர் கொண்ட கும்பல் வங்கிக்குள் நுழைந்தனர். அவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியை காட்டி வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களை மிரட்டியுள்ளனர். துப்பாக்கி முனையில் அவர்களை ஒரு அறைக்குள் வைத்து பூட்டிய அந்தக் கும்பல் வங்கியில் இருந்த ரூபாய் 6லட்சமும், வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 10 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களை அந்தக்கும்பல் தாக்கியுள்ளனர்.
கொள்ளையர்கள் சென்ற பின் ஊழியர்கள் அறையை உடைத்துக்கொண்டு வெளியில் வந்துள்ளனர். இதன்பின்னர் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி காவல்துறை இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
Loading More post
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
“சத்தம் ரொம்ப அதிகமா இருக்கு” - அகமதாபாத் ஆடுகள சர்ச்சை குறித்து கோலி கருத்து
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?