புதரில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சேலத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை கற்களுக்கிடையே மீட்கப்பட்டுள்ளது.


Advertisement

சேலம் வெள்ளக்கல்பட்டி பகுதியில் மாக்னசைட் தாது வெட்டி எடுக்கப்படும் இடம் உள்ளது. அங்கே உள்ள புதர் ஒன்றில் இருந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. அந்த வழியாக சென்ற இளைஞர்கள் சிலர், குழந்தையின் சத்தம் கேட்டு புதருக்குள் பார்த்துள்ளனர். அப்போது குவித்து வைக்கப்பட்டிருந்த கற்களுக்கிடையில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. கற்களை தள்ளிப்பார்க்கும் போது, அதற்கிடையே பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் சிசு இருந்துள்ளது.

குழந்தையை மீட்ட இளைஞர்கள் சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர், தொப்புள்கொடி கூட அறுக்கப்படாத அக்குழந்தையை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கற்களின் அழுத்தத்தால் குழந்தையின் உடலில் சில இடங்களில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், குழந்தையைக் கொலை செய்ய முயன்றது யார்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement