வாழ்வா ? சாவா ? கொல்கத்தாவுக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முக்கியமான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 182 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ். 


Advertisement

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் 4 மணிக்கு தொடங்கியது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஸ்கோர்  91 ரன்னாக இருக்கும்போது எவின் லெவிஸ் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். 

அடுத்து களம் இறங்கிய ரோகித் சர்மா 11 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் 39 பந்துகளில்  59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிறப்பான பந்து வீச்சால் ரன் குவிக்க தடுமாறிய மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் அடித்துள்ளது. இறுதிவரை ஆட்டமிழக்காத ஹர்திக் பாண்டியா 20 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் அடித்துள்ளது. இதனால் 182 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement