பெங்களூருவில் சங்கிலித் திருடன்கள் இருவர் பெண் ஒருவரை இரக்கமின்றி தாக்கும் வீடியோ காட்சிகள் பரவி வருகிறது.
பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் வீட்டின் வெளியே இரு பெண்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு சங்கிலித் திருடன்கள், ஒரு பெண்ணின் கழுத்திலிருந்து சங்கிலியைப் பறிக்க முயன்றனர். அந்தப் பெண் அவர்கள் கையை தட்டிவிட, சங்கிலியைப் பறிக்க முடியவில்லை. அப்போது நகர்ந்து கொண்டிருந்த வண்டியில், பின்புறம் உட்கார்ந்திருந்த திருடனின் முதுகில் அப்பெண் அடித்தார். அத்துடன் சத்தம் போட்டு திருடன்களை திட்டினார்.
இதையடுத்து நடுரோட்டில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, அப்பெண்ணை தாக்க திருடன்கள் இறங்கி வந்தனர். இதைக்கண்டதும் அப்பெண்ணுடன் நின்றுகொண்டிருந்த மற்றொரு பெண் வீட்டிற்குள் ஓடிவிட்டார். இறங்கி வந்த திருடன்கள் அவர்களை திட்டியப் பெண்ணை இரக்கமின்றி தாக்கத்தொடங்கினர். அவர்களின் தாக்குதலை அந்தப் பெண் எதிர்கொள்ள முயன்றார். அப்போது தகாத முறையிலும் அந்தப் பெண்ணிடம் நடந்துகொள்ள திருடன்கள் முயன்றனர். பின்னர் அந்தப் பெண்ணை அடித்து, தாக்கிவிட்டு திருடன்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரவி வருகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
ஜனவரி 21-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்