[X] Close >

தவறி விழுந்த தந்தை, மகன் : காப்பாற்றிய போக்குவரத்து காவலர்

Father-and-son-are-Failing-in-lake-Traffic-policemen-has-rescue

மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தந்தையும் மகனும் ஏரியில் தவறி விழுந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ஏரியில் குதித்து காப்பாற்றியுள்ளார். 


Advertisement

பூவிருந்தவல்லியில் வசிக்கும் ஜெமினி, அவரது மனைவி மகனுடன் படப்பையிலிருந்து பூவிருந்தவல்லியை நோக்கி தன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது போரூர் ஏரி மீது சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி சாலையின் தடுப்பில் மோதியதில், ஜெமினி மற்றும் அவரது மகன் அசோக் ஆகிய இருவரும் மேம்பாலத்தின் மேலிருந்து ஏரிக்குள் விழுந்துவிட்டனர். அதைக் கண்ட போக்குவரத்து காவலர் வெங்கடேசன், ஏரிக்குள் குதித்து ஜெமினி மற்றும் அசோக் ஆகிய இருவரையும் மீட்டுள்ளார். 


Advertisement

அதையடுத்து காயமடைந்த இருவரும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரைப் பணயம் வைத்து தந்தை, மகனைக் காப்பாற்றிய போக்குவரத்து காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

வீடியோ

Related Tags : Traffic policemenTrafficTraffic policechennaiTamilnadu
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close