ஆட்டோவை திருடிய கும்பல்: பைக்கில் விரட்டிப்பிடித்த தம்பதி!

3-North-Indians-Theft-Auto-in-Chennai--a-Couple-chase-their-and-Caught

சென்னையில் ஆட்டோவை திருடிச் சென்ற 3 பேரை, தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று பிடித்தனர். 


Advertisement

சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த அயூப்கான் வீட்டு முன் அவரது உறவினரின் ஆட்டோ நின்று கொண்டு இருந்தது. அந்த ஆட்டோவை 3 பேர் கள்ளச்சாவி போட்டு அதை திருடிச் சென்றனர். இதை பார்த்த அயூப்கானினும் மனைவி வகிதா பேகமும் இருசக்கர வாகனத்தில் ஆட்டோவை துரத்திச் சென்றனர். எழும்பூர் காந்தி இர்வின் பாலத்தில் ஆட்டோவை முந்திய அயூப்கான் இருசக்கர வாகனத்தை குறுக்கே நிறுத்தி சாலையை மறித்தார். 

அவரிடம் சிக்காமல் திருடர்கள் தப்பிச் செல்ல முயன்ற போது ஆட்டோ கவிழ்ந்தது. அதிலிருந்த 3 திருடர்களில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். ‌எஞ்சிய இருவரை தாக்கிய பொதுமக்கள் அவர்களை பாலத்தின் தூணில் கட்டி வைத்தனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு திருடர்களை கைது செய்தனர். பட்டப்பகலில் ஆட்டோ திருடியவர்களை விரட்டி பிடித்த அயூப்கான் தம்பதியை அனைவரும் பாராட்டினார்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement