ஒடிசாவில் கடந்த 2014 முதல் 2017 வரை மட்டும் சுமார் 4749 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் 385 கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் அம்மாநில சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓடிசா காங்கிரஸ் மாநில தலைவர் தாராபிரசாத் பாஹினிபதி (Taraprasad Bahinipati) கடந்த 4 வருடங்களாக மாநிலத்தில் பதிவான பாலியல் வழக்கு குறித்து எழுத்துப்பூர்வமாக கேள்வி கேட்டிருந்தார். இதுதொடர்பாக பேரவையில், கடந்த 2017ஆம் ஆண்டு சிறுமிகளுக்கு எதிராக 1,283 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், 2016-ல் (1,204), 2015-ல் (1,212), 2014-ல் (1,050) வழக்குகளும் பதியப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். ஓடிசாவில் கடந்த 2014 - 2017 ஆம் ஆண்டுகளில் சுமார் 4749 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் 4,462 பேரை கைது செய்துள்ளதாகவும் சிறுமிகளுக்கு எதிராக நடைப்பெற்ற 4,749 பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஒடிசா மாநில காவல்துறையில் 2014 முதல் 2017 வரையான காலகட்டத்தில் 385 கூட்டுபாலியல் வன்கொடுமை வழக்குகள் பதியப்பட்டுள்ளது.இதில் 2017-ல் (92), 2016-ல் (93), 2015-ல் (109), 2014-ல் (91) வழக்குகளும் பதியப்பட்டுள்ளதாக பேரவையில் நவீன் பட்நாயக் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் கைதுசெய்யப்பட்டுள்ள 752 நபர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.12 வயதுக்கு குறைவான சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பட்நாயக் தெரிவித்தார்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!