ஆர்.கே.நகர் திமுக வேட்பாளர் அறிவிப்பு எப்போது?: ஸ்டாலின் பதில்

DMK-to-announce-RK-Nagar-bypoll-Candidate-tommorrow

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் குறித்து நாளை அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Advertisement

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 12ம் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து கருணாநிதியுடன் ஆலோசித்த பின்னர் நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். தேர்தலில் யாரையும் போட்டியாகக் கருதவில்லை என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement