சென்னை அணியில் அதிரடி மாற்றம் !

IPL-Live-Cricket-Score--Chennai-Super-Kings-vs-Delhi-Daredevils--Shreyas-Iyer-Wins-Toss--Opts-To-Field-vs-Chennai

புனேயில் 8 மணிக்கு நடைபெறும் இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. 


Advertisement

ஐபிஎல் தொடரின் 30-வது ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரவு 8 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். சென்னை அணியில் இம்ரான் தாஹிர், சாம் பில்லிங்ஸ், தீபக் சஹார் மற்றும் ஸ்ரதுல் தாகுர் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. 

அவர்களுக்குப் பதிலாக, தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி, கேரளாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிஃப், சுழற்பந்துவீச்சாளர் கரண் சர்மா மற்றும் டூபிளஸி ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்த சீசனில் இரு அணிகளும் சந்திப்பது இதுதான் முதல்முறை. இதுவரையிலான ஐ.பி.எல் தொடர்களில், இரு அணிகளும் 16 முறை மோதியுள்ளன. இதில் சென்னை 11 முறையும், டெல்லி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன.


Advertisement

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement