[X] Close >

மாநில சுயாட்சியை பாதுகாக்க விரைவில் தேசிய அளவில் கூட்டம்: ஸ்டாலின்

DMK-intends-to-invite-all-like-minded-political-parties--MKStalin

மாநில சுயாட்சியை பாதுகாக்க, விரைவில் திமுக சார்பில் தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என திமுக செயல்தலைவர் முகஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள ஸ்டாலின், 15ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகள் மாநில சுயாட்சிக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். எனவே மாநில சுயாட்சிக்கு குரல் கொடுக்கும் முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை கொண்டு திமுக விரைவில் தேசிய அளவிலான ஆலோசனை கூட்டத்தை நடத்தும் என கூறியுள்ளார். இதற்காக அந்தந்த தலைவர்களிடம் திமுக பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் குறித்து பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் கடிதம் கிடைத்ததற்கான தகவல் கூட பிரதமர் அலுவலகத்திடம் இருந்து வரவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஏதேனும் பிரச்னை என்றால் வேறுபாடுகளை மறந்து அனைத்து கட்சிகளும் ஓரணியாக திரளும்போது தமிழகத்தில் மட்டும் அது நடப்பதில்லை என்றும் அதனை சரி செய்யும் முயற்சிகளில் திமுக ஈடுபட்டிருப்பதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். தற்போது பல்வேறு எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டிருந்தாலும் இதனை தேர்தல் கூட்டணியாக எடுத்து கொள்ள முடியாது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்ததால் திமுக பாஜக இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறுவதில் உண்மை இல்லை என்றும் அந்த சந்திப்புக்கு பிறகு தான் திமுக மத்திய அரசுக்கு எதிரான பல போராட்டங்களை நடத்தியதாகவும் கூறியுள்ளார். தற்போது தமிழகத்தில் ஆள்கின்ற அரசு லஞ்சம்,ஊழலில் திளைத்திருக்கிறது என குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின், உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் தமிழகத்திற்கு கிடைத்த முதலீடுகள் குறித்து பலமுறை அரசிடம் கேட்டும் இதுவரை தெளிவான பதில் கிடைக்கவில்லை என விமர்சித்துள்ளார்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close