[X] Close >

சிறுவனின் விளையாட்டால் நேர்ந்த சாலை விபத்து

Road-accident-by-the-boy-s-game

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாலை விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஏழு வயது சிறுவனை இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின் காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.


Advertisement

வேலூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆரியபெரும்பாக்கம் என்ற இடத்தில் எதிரே வந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்த சிவலிங்கம் என்பவரது ஏழு வயது மகன் விளையாட்டுத்தனமாக கார் ஸ்டேரிங்கை பிடித்து திருப்பியதால், இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த உள்ளூர் மக்கள் காரில் இருந்த சிவலிங்கத்தை சிறு காயங்களுடன் பத்திரமாக மீட்டனர். லாரியின் முன்பகுதியுடன் கார் மாட்டிக் கொண்டதால், இடிபாடுகளில் சிறுவனின் கால் சிக்கிக் கொண்டது. இதனால் அவனை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் கிரேனை வரவழைத்து, இடிபாடுகளை அகற்றி சிறுவனை பத்திரமாக மீட்டார். இதைத் தொடர்ந்து சிறுவன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close