ஐதராபாத் அணியின் அசத்தல் பந்து வீச்சில் பணிந்தது ராஜஸ்தான்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.


Advertisement

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்து. தொடக்க வீரர்களாக அலெக்ஸ் ஹேல்ஸ், தவான் களம் இறங்கினார்கள். தவான் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹேல்ஸ் உடன் கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், 109 ரன்கள் இருந்த போது ஹேல்ஸ் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு ஐதராபாத் 151 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 63 ரன்கள் சேர்த்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஜாஃப்ரா ஆர்சர் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார். 

152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 13 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தது. 4 ரன்களில் ராகுல் திரிபாதி ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன், கேப்டன் ரஹானேவுடன் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்தது. குறிப்பாக சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினார்.


Advertisement

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்கோர் 9.4 ஓவரில் 72 ரன்னாக இருக்கும்போது சஞ்ச சாம்சன் 30 பந்தில் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அதிரடி பேட்ஸ்மேன் பென் ஸ்டோக்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் யூசுப் பதான் பந்தில்  ஆட்டமிழந்தார். சாம்சனுக்குப் பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள், வருவதும் போவதுமாக இருந்தனர். ஜோஸ் பட்லரும் 10 ரன்களில் வெளியேற ராஜஸ்தான் அணி அணிக்கு கடைசி 5 ஓவரில் 50 ரன்கள் தேவைப்பட்டது. ஐதராபாத் அணியின் சிறப்பான பந்து வீச்சால் ராஜஸ்தான் அணி வீரர்கள் ரன் குவிக்க திணறினர். 17-வது ஓவரில் அரை சதம் கண்ட கேப்டன் ரஹானேவும் அதிரடியை வெளிபடுத்த தவறியதால் ராஜஸ்தான் அணிக்கு கடைசி இரண்டு ஓவரில் 27 ரன்கள் தேவைப்பட்டது. 

ஆனால் ராஜஸ்தான் அணியால் 15 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ரஹானே, 53 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே சேர்த்து, இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஐதராபாத் அணி தரப்பில், சித்தார்த் கவுல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement