JUST IN

Advertisement

செங்கோட்டையை தனியாருக்கு தருவதா? மம்தா பானர்ஜி கடும் கண்டனம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லி செங்கோட்டையை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதற்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 


Advertisement

இந்தியாவின் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களில் ஒன்று செங்கோட்டை. டெல்லியில் உள்ள இதன் பராமரிப்பு பணியை தனியார் நிறுவனமான தி டால்மியா பாரத் குரூப்பிடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. இதற்காக, ஆண்டுக்கு ரூ.5 கோடியை அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கும். 5 ஆண்டுகளுக்கு ரூ.5 கோடி வீதம், ரூ.25 கோடியை டால்மியா நிறுவனம் பெற்றுக்கொண்டு டெல்லி செங்கோட்டையை பராமரிக்க இருக்கிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கோட்டை என்பது தேசிய அடையாளம் என்றும் அதை தனியார் பராமரிக்க அனுமதித்தது நாட்டின் கறுப்பு நாள் என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். வரலாற்றுச் சிறப்பு மிக்க கோட்டையை நிர்வகிக்க மத்திய அரசால் இயலவில்லையா? என்றும் மம்தா கேள்வி எழுப்பியுள்ளார். 


Advertisement


 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement