திருத்தணியில் காதலியை மணமுடிக்க, பெண்ணின் பெற்றோர் சம்மதிக்காததால் இளைஞர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
வேலூர் மாவட்டம், புளியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராகேஷ். இவர் இந்திய கடற்படை விமானதளத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் திருத்தணியை சேர்ந்த அதிமுக நகரமன்ற செயலாளர் சௌந்தரராஜன் என்பவரின் மகள் அஸ்வினியும் காதலித்து வந்ததாக தெரிகிறது. அஸ்வினி, டெல்லியில் படித்து வருகிறார். இந்நிலையில், குடும்பத்தினருடன் அஸ்வினி வீட்டிற்கு பெண் கேட்டு சென்றுள்ளார் ராகேஷ் . பெண் கொடுக்க மறுப்பு தெரிவித்து ராகேஷை, சௌந்தரராஜன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராகேஷ் வீட்டிற்கு வெளியில் தீக்குளித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், பெண்ணின் குடும்பத்தினரே தீ வைத்ததாக ராகேஷின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். ராகேஷின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைக்க உறவினர்கள் முயற்சி செய்துள்ளனர். அதற்குள் தீ மளமளவென பரவியது. ராகேஷுக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ராகேஷை காப்பாற்ற முயன்ற அவரது குடும்பத்தினர் இருவர் காயமடைந்தனர்.
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி