அரசு வழங்கும் ஆலோசனைகளை பின்பற்றி விவசாயிகள் பட்டு வளர்ச்சியில் தமிழகத்தை முதலிடத்திற்கு முன்னேற்ற வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
சேலத்தில் ஊடக தொழில் வளர்ச்சி துறையின் சார்பில் பட்டு விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோருக்கான கண்காட்சி அற்றும் கருத்தரங்கை பழனிசாமி தொடங்கிவைத்தார். முன்னதாக கூட்டு பண்ணைகள் திட்டத்தின் கீழ் 31 விவசாய குழுக்களுக்கு ரூ.1.55 கோடி மதிப்பிலான வேளான் உபகரணங்களை வழங்கினார். மேலும் ரூ.4.14 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர், 14.40 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பட்டு வளர்ப்பு கையேடு மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் கையேட்டையும் அவர் வெளியிட்டார்.
பின்னர் விழாவில் உரையாற்றிய அவர், பட்டு தொழில் வளர்ச்சியில் மத்திய, மாநில அரசுகள் ரூ.148 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாகவும், தமிழகத்திற்கு பட்டு நூல் தேவை என்றும் கூறினார். இந்திய அளவில் கச்சாப்பட்டு உற்பத்தில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது என்றும், அரசின் ஆலோசனைகளை பின்பற்றி விவசாயிகள் பட்டு உற்பத்தியில் முதலிடத்திற்கு முன்னேற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
Loading More post
கீழடி அகழாய்வில் முதுமக்கள் தாழியுடன் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!
ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால்..? - உச்ச நீதிமன்ற யோசனையும், தமிழக அரசின் வாதங்களும்
ஆக்ஸிஜன் ஆலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்- அர்விந்த் கெஜ்ரிவால்
ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட்டை திறக்க தமிழக அரசு மீண்டும் எதிர்ப்பு
"20 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு உடனே தேவை" - பிரமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை