JUST IN

Advertisement

நளினி வழக்கில் இன்று தீர்ப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராஜீவ் கொலை வழக்கில் தன்னை முன் கூட்டியே விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.


Advertisement

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு சட்டப்பேரவையில் 2014இல் தீர்மானம் நிறைவேற்றியது. அதனை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலையில், முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி 2015ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 


Advertisement

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சத்தியநாராயணன், உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் அடிப்படையில் நளினி கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்கும்படி, 2016ஆம் ஆண்டு ஜீலை 21ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து நளினி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், அரசியல் சாசனம் சரத்து 161-ன் படி சிறையில் உள்ள கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும், இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நளினி தரப்பில் வாதிடப்பட்டது. 

பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை முன்கூட்டி விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தமிழக அரசால் எந்த முடிவும் எடுக்க இயலாத நிலையில் இருப்பதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை முடித்த நீதிபதிகள், இன்று தீர்ப்பு வழங்க உள்ளனர்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement