ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக்கோரி வழக்கு.. கடந்துவந்த பாதை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு கடந்து வந்த பாதையை தெரிந்துகொள்வோம்.


Advertisement

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீ செல்வம் உள்ளிட்ட 11 பேரை தகுதி நீக்க செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி மனுத்தாக்கல் செய்தார். அரசு தலைமை கொறடா உத்தரவை மீறி செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டிடிவி தினகரன் ஆதரவு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

சக்கரபாணி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆகியோர் ஆஜரானார்கள்.


Advertisement

சக்கரபாணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் முதல்வருக்கு அளித்த ஆதரவை விலக்கி கொள்வதாக அறிவித்த உடனே, ஆகஸ்ட் 24ஆம் தேதி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் 9 மாதங்களாகியும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற வாதத்தை முன்வைத்தார்.

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை விசாரிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று அவர்கள் தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதிட்டார். சபாநாயகர் முடிவு எடுக்காத நிலையில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட முடியுமா என்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் உள்ளது என்று கூறிய அவர், ஒரு புகாரில் சபாநாயகர் எந்த ஒரு முடிவும் எடுக்காதவரை அந்த விவகாரத்தில் நீதித்துறை ஆய்வு செய்ய முடியாது என்றார்.


Advertisement

கொறடா உத்தரவு பிறப்பித்தாலும், உத்தரவிடாவிட்டாலும் அரசுக்கு ஆதரவாக மட்டுமே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார். சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என சக்கரபாணி தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் குற்றம் சாட்டினார்.

ஆளுங்கட்சி உறுப்பினர்தான் பெரும்பாலும் சபாநாயகராக நியமிக்கப்படுகிறார் என்றாலும், அவர் முழுமையாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத்தான் செயல்படுவார் என சொல்லிவிட முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் பிப்ரவரி 27ஆம் தேதி நிறைவு பெற்றது. மார்ச் 5ஆம் தேதி எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்க உள்ளது.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement