குறைந்த ஸ்கோர் எடுத்தாலும் பந்துவீச்சால் வெல்வோம்: ரஷித் கான் நம்பிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குறைவான ஸ்கோர் எடுத்தாலும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை கிடைத்திருப்பதாக ஐதராபாத் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கான் கூறியுள்ளார். 


Advertisement

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் நேற்று மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின், பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். ஐதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் மணிஷ் பாண்டே 54 ரன்களும் ஷகிப் அல் ஹசன் 28 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளா் அங்கித் ராஜ்புத், 4 ஓவர்களில் 14 ரன்களே விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி, 19.2 ஓவரில் 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. அதிக பட்சமாக அந்த அணியின் கே.எல்.ராகுல் 32 ரன்களும் கிறிஸ் கெயில் 23 ரன்களும் எடுத்தனர். ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக ரஷித் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


Advertisement

பின்னர் ரஷித் கான் கூறும்போது, ‘சென்னை மற்றும் பஞ்சாப்புக்கு எதிரான முந்தையை போட்டிகளில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு மீண்டு வருவது கடினமாக இருந்தது. (இந்த இரண்டு போட்டிகளிலும் ரஷித் 4 ஓவர்கள் வீசி முறையே, 55, 49 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார்). இது கிரிக்கெட்டில் சகஜம்தான். அணியின் ஒத்துழைப்பு அருமையாக இருந்தது. பவர்பிளே-க்குப் பின் என்னைப் பந்துவீசச் சொன்னது பற்றி தெரியவில்லை. ஆனால் எப்போது வீச சொன்னாலும் தயாராகத்தான் இருந்தேன். இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் விக்கெட்டை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் எனக்குப் பிடித்த, கிளாஸான வீரர். விக்கெட்டுக்கு நேராக பந்தை விதவிதமான லென்தில் வீசினேன். அது பலளித்தது.  

இந்த வெற்றிக்குப் பிறகு குறைவான ஸ்கோர் எடுத்தாலும் பந்துவீச்சால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. எங்கள் பீல்டிங்கும் அருமையாக இருந்தது. இருந்தாலும் எங்கள் பேட்ஸ்மேன் இன்னும் அதிகமாக ரன்கள் குவிக்க வேண்டும். கடந்த இரண்டு போட்டிகளில் பிட்ச் எளிதானதாக இல்லை. அடுத்த போட்டிகளில் அதிக ரன்கள் குவிப்போம்’ என்றார் . 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement