கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகியுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ’காலா’ படம் ஜூன் மாதம் 7ம் தேதி வெளியாகிறது. இதில் ஹூமா குரேஸி, நானா படேகர், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ளனர். வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து ள்ளார். இந்தப் படத்தை அடுத்து, ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ’2.ஓ’ படம் வெளியாகிறது. பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் தீவிரவாக நடந்துவருகின்றன. லைகா தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். நிரவ் ஷா ஒளிப் பதிவு செய்துள்ளார்.
இதை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டது. இதை முதன் முதலில் கடந்த பிப்ரவரி மாதம் செய்தியாக வெளியிட்டது, புதிய தலைமுறை இணையதளம். இந்நிலையில் அவர் வில்லனாக நடிப்பது உறுதியாகியுள்ளது. இதை சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இந்தப் படத்துக்காக விஜய் சேதுபதி 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். செப்டம்பரில் அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது.
அழுத்தமான வில்லன் வேடம் என்பதால் விஜய் சேதுபதியை நடிக்க வைப்பதாகவும் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை அவர் வெளிப்படுத்துவார் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்வதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
இதுபற்றி விஜய் சேதுபதி, ’இது போன்ற வாய்ப்பு வாழ்க்கையில் ஒரு முறைதான் கிடைக்கும். படப்பிடிப்புத் தொடங்கும் தினத்தை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். படப்பிடிப்பு முழுவதும் ஒரு ரசிகனின் மனநிலையில் இருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி நடித்துள்ள ’ஜூங்கா’ விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அடுத்து, தியாகராஜன் குமாரராஜா இயக்கும் ’சூப்பர் டீலக்ஸ்’, பாலாஜி தரணிதரன் இயக்கும் ’96’, மணிரத்னத்தின் ’செக்க சிவந்த வானம்’, அருண்குமார் இயக்கும் படம் என பிசியாக இருக்கிறார்.
Loading More post
நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்