காவிரி ‌நீரை பெறாமல் அரசு ஓயாது : ஓ.பன்னீர்செல்வம் உறுதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காவிரி நீரை பெற்றுத் தராமல் இந்த அரசு ஓயாது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


Advertisement

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அதிமுக சார்பில் நாகையில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “காவிரி பிரச்னையை பற்றி பேசுவதற்கு தார்மீக பொறுப்பு உள்ள ஒரே கட்சி அதிமுக மட்டும்தான். காவிரி பிர‌ச்னையில் தற்போது நடைபயணம், மனித சங்கிலி போராட்டம் என கபட நாடகத்தை திமுக அறங்கேற்றி வருகிறது. அதிமுக அரசு தற்போது சட்ட வல்லுனர்களை கொண்டு ஆலோசனை நடத்தி வருகிறது. (ஸ்கீம்) அமைப்பதற்கு மத்திய அரசுக்கு மே 3-ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. எனவே மே 3-ஆம் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். 28 ஆண்டு காலம் கட்டிக் காத்த அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது, காவிரி நீரை பெற்றுத் தராமல் இந்த அரசு ஓயாது” எனவும் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட கூறினார்.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement