[X] Close >

சுகாதாரத்தை காக்க ஆடுகளை விற்று கழிப்பறை கட்டிய உ.பி விவசாயி: குவியும் பாராட்டு

UP-villager-who-sold-his-goats-to-build-toilet-gets-reward--and-a-new-flock--in-return

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கிராமவாசி ஒருவர் தனது ஆடுகளை விற்று வீட்டிற்கு கழிப்பறையை கட்டியுள்ளார்.


Advertisement

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் ஜபார். இவர் வீட்டில் கழிப்பறை வசதி இல்லை. மலம் கழிக்க பொது இடங்களைதான் பயன்படுத்தி வந்திருக்கிறார். இதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏகப்பட்ட சிரமம். பொது இடங்களில் மலம் கழிப்பதினால் ஏற்படும் அசுத்தத்தை உணர்ந்த ஜபார் வீட்டில் கழிப்பறை கட்ட முயற்சி மேற்கொண்டிருக்கிறார். ஆனால் அவரிடம் அதற்கான பணம் இல்லை. இதனையடுத்து மாவட்ட அதிகாரிகளிடம் கழிப்பறை கட்ட பணம் கேட்டிருக்கிறார். ஆனால் அவருக்கு எங்கிருந்தும் உதவி கிடைக்கவில்லை.

எப்படியாவது கழிப்பறையை கட்டியே தீர வேண்டும் என முடிவெடுத்த ஜபார், இதற்காக தான் வீட்டில் வளர்த்து வந்த 7 ஆடுகளை விற்றுவிட்டார். இந்த ஆடுகள் தான் வீட்டின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக இருந்த நிலையில் ஜபார், அதனையும் விற்றுவிட்டார். அதன் மூலம் கிடைத்த ரூபாய் 15,000 பணத்தில் வீட்டில் கழிப்பறை கட்டி முடித்தார். இதனையடுத்து வருமானத்திற்கு வழி இல்லாமல் இருந்திருக்கிறார். ஜபார் ஆடுகளை விற்று கழிப்பறை கட்டிய செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.  இதனையடுத்து இந்த விஷயம் பல தலைவர்களுக்கும் தெரியவர ஜபாருக்கு அவர்கள் உதவி வருகின்றனர்.


Advertisement

சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ஜபாரின் நடவடிக்கையை பாராட்டும் விதமாக, அவருக்கு ரூ.22 ஆயிரம் மதிப்பிலான 7 ஆடுகளை பரிசாக வழங்கியுள்ளார். மேலும் உத்த்தரபிரதேச அரசானது, கழிவறையை கட்டுவதற்கு செலவு செய்த ரூபாயை ஜபாருக்கு திரும்ப வழங்கியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close