11, 12ஆம் வகுப்புகள்: மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு தான்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

11, 12ஆம் வகுப்பு மொழிப்பாடங்களின் தேர்வுகளை, இனி ஒரே தாளாக மாற்றி தேர்வு நடத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.


Advertisement

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில், தற்போது உள்ள கல்வித்திட்டத்தின் படி 11, 12ஆம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு தாள் 1 , தாள் 2 என இரண்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதனால் மாணவர்கள் மொழிப்பாடங்களுக்கே 4 தேர்வுகள் எழுதுகின்றனர். இதுதவிர முக்கிய பாடங்களாக 4 உள்ளது. அவற்றையும் சேர்த்தால் மொத்தம் 10 தேர்வுகளை மாணவர்கள் எழுதுகின்றனர். மாணவர்களின் இந்த தேர்வுச் சுமையை குறைக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இதற்காக மொழிப்பாடங்களில் எழுதும் தாள் 1, தாள் 2 ஆகிய இரண்டையும் இணைத்து ஒரே தேர்வாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் ஆகிய இரண்டு பாடங்களையும் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் 11, 12ஆம் வகுப்புகளில் உள்ள 4 முக்கிய பாடங்களின் எண்ணிக்கையை, மூன்றாக குறைக்கவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த மாற்றத்தைக் கொண்டு வர டெல்லியிலும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement