[X] Close >

ஸ்டாலின் தன்னை கருணாநிதி போல் நினைத்துக்கொள்கிறார்: விஜயகாந்த் 

All-party-meet-held-at-DMK-office--so-didn---t-go--Vijayakanth

திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கவிடாமல் திட்டமிட்டு ஸ்டாலின் தன்னை தடுத்ததாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிட் டுள்ளார்.


Advertisement

காவிரி விவகாரத்திற்காக திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக ஏன் பங்கேற்கவில்லை என்பது தொடர்பான கேள்விக்கு, அங்கே அனைத்தும் ஸ்டாலினை மையப்படுத்தியே நடப்பதாகவும், ஒவ்வொரு கட்சிக்கும் சொந்த நிலைப்பாடு இருக்கும் என்றும் விஜயகாந்த் பதில் அளித்துள்ளார்.

தேமு‌திக ஏன் திமுகவின் அனைத்துக் கட்சிக்கு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் ஸ்டாலினின் புகழுக்காகவா எனவும் வி‌னவினார். ஸ்டாலின் தன்னை கருணாநிதி போன்று நினைத்துக் கொண்டு செயல்படுவதாகக் கூறிய விஜயகாந்த், இந்தக் கூட்டத்தை கருணாநிதி நடத்தியிருந்தால் முதல் நபராக தான் பங்கேற்றிருப்பேன் எனக் கூறினார். கடந்த வருடம் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க அவரை சந்திக்க விரும்பியபோது, ஸ்டாலினை தொடர்புகொள்ளக் கூறினர். பின்னர் ஒருநாள் சூரசம்ஹாரம் எனக்கூறி அவரை பார்ப்பதற்கு உகந்தநாள் அல்ல என அவர்கள் கூறியதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அதன்பிறகு தனக்கு அந்த ஆர்வம் குறைந்துவிட்டதாகவும், கருணாநிதியை பார்க்கவிடாமல் திட்டமிட்டே ஸ்டாலின் தன்னை தடுத்துவிட்டதாகவும் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close