திருச்செந்தூர் அருகே திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரத்தில் பெற்ற தாயை கடப்பாரையால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள குரும்பூர் புதுநகரை சேர்ந்தவர் மாரியம்மாள்(45). இவருக்கு ராமஜெயம் (23) என்ற மகன் உள்ளார். கணவர் இறந்து 10 மாதங்கள் ஆகின்ற நிலையில் மாரியம்மாள் தனது மகன் ராமஜெயத்துடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே ராமஜெயம் இன்று மதியம் குரும்பூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு விட்டு மதுபோதையில் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
வீட்டிற்கு வந்ததும் ராமஜெயம், தனது தாய் மாரியம்மாளிடம் தனக்கு ஏன் இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது மாரியம்மாள் எதையோ சொல்லி சமாளித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ராமஜெயம், பெற்றத் தாய் என்றும் பாராமல் மாரியம்மாளை கடப்பாரையால் தலையில் அடித்து கொலைசெய்து விட்டு தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து குரும்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ராமஜெயத்தை தேடி வருகின்றனர். தன்னை பத்துமாதங்கள் சுமந்து பெற்றெடுத்த தாயை மது போதையில் மகன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?