வந்தாச்சு விஸ்வாசம் அப்டேட் : அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அஜித்தின் விஸ்வாசம் படப்பிடிப்பு மே மாதம் 4-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

வீரம், வேதாளம், விவேகம் படத்தைத் தொடர்ந்து 4வது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் விஸ்வாசம் படத்தில் நடிக்கயிருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வழக்கமான காதல் கதையம்சம் கொண்ட படமாக இல்லாமல் திகில் படமாக உருவாகவிருப்பதாகவும் தகவல் வெளியானது.


Advertisement

இதனிடையே டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிராகத் தமிழ் திரைப்பட தயாரிப்பளர் சங்கத்தினர் மார்ச் 1ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தை தொடங்கினர். இதனால் புதுப்படங்கள் வெளியீடு தள்ளிப்போனது. படப்பிடிப்பும் ஏதும் நடைபெறாமல் இருந்தது. பின்னர், ஏப்ரல் 17ம் தேதி அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டத்திற்கு பின் முதல் படமாக ‘மெர்க்குரி’ படமும் வெளியானது. தற்போது பாதியில் விடப்பட்ட படப்பிடிப்புகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித்தின் விஸ்வாசம் படப்பிடிப்பு மே மாதம் 4-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹைதராபாத்தில்தான் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. அஜித் குறித்து சிறிய செய்தி வந்தால் கூட மகிழ்ச்சியின் எல்லைக்கு சென்றுவிடும் அவரின் ரசிகர்கள் தற்போது விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு குறித்த செய்தியால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement