[X] Close >

பாஜகவை புறக்கணிக்க வேண்டும்: நடிகர் பிரகாஷ் ராஜ் கோரிக்கை

My-campaign-is-only-against-the-BJP-Prakash-raj

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.


Advertisement

பெங்களூரில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த நடிகர் பிரகாஷ் ராஜ் கூறும்போது, ‘நான் எந்த கட்சியிலும் சேரவில்லை. நாட்டு நலனுக்காக சில கேள்விகளை கேட்க தொடங்கியுள்ளேன். என்னைத் தொடர்ந்து பலர் கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.  இதற்காக, ‘ஜஸ்ட் ஆஸ்கிங்‘ என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளேன். இது அரசியல் சார்பற்ற அமைப்பு. நான் மாநிலம் (கர்நாடகா) முழுவதும் சுற்றுப்பயணம் செய்து குழுக்களை அமைத்து வருகிறேன்.

அநீதிக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும். அரசின் தவறுகளை தட்டி கேட்க வேண்டும். அனைவருக்கும் கேள்வி கேட்கும் உரிமை உள்ளது என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு இது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜனதாவை புறக்கணிக்க வேண்டும். கர்நாடக மக்களுக்கு எனது வேண்டுகோள் இதுதான். நான் மதங்களுக்கு எதிரானவன் இல்லை. ஒரு மதத்தை திணிப்பதைதான் எதிர்க்கிறேன். நடிகர்கள் ரஜினி, கமல் தொடங்கியுள்ள கட்சிகளின் கொள்கைகள் இன்னும் தெரியவில்லை. அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’ என்றார்.


Advertisement


 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close