ஜூன் 7ல் வெளியாகிறது ‘காலா’

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

‘காலா’ படத்தின் வெளியீடு பற்றி அதிகாரப்பூர்வமான செய்தி வெளியாகியுள்ளது.


Advertisement

சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘காலா’வின் கதை தனக்கு சொந்தமானது என ராஜசேகரன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் ‘காலா’ படத்தின் தலைப்பை ஏற்கனவே முறைப்படி பதிவு செய்திருப்பதாகவும் முறையிட்டிருந்தார். ஆகவே படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என கேட்டிருந்தார். இதனால் ‘காலா’ வெளியாகுமா? இல்லை தள்ளிப்போகுமா? என சந்தேகம் எழுந்தது. ஆனால் வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்திற்கு தடை விதிக்க மறுத்து உத்தரவு போட்டது. ஆக, படம் வெளி வருவதில் ஏற்பட்டிருந்த சிக்கல் முடிவுக்கு வந்தது. ஏற்கெனவே ஏப்ரல் 27 அன்று படம் வெளியாகும் என தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்திருந்தார். இடையில் ஏற்பட்ட பிரச்னைகளால் இப்போது பட வெளியீடு சம்பந்தமாக வேறொரு அறிவிப்பை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “மகிழ்ச்சியான அறிவிப்பு. உலகம் முழுவதும் வரும் ஜூன் 7 அன்று ‘காலா’திரையிடப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement