JUST IN

Advertisement

‘காலா’விற்கு தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை உயர்நீதிமன்றம் ‘காலா’ படத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.


Advertisement

பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காலா’. படக்குழு ஏற்கனவே ஏப்ரல் 27 அன்று இத்திரைப்படம் வெளியிடப்படும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் கதை தனக்கு சொந்தமானது எனக் கூறி ராஜசேகரன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் படத்தை தடை செய்ய வேண்டும் படியும் கேட்டுக்கொண்டிருந்தார்.

மேலும் கரிகாலன் என்ற பெயரை ஏற்கனவே முறையாக பதிவு செய்திருக்கிறேன் என்றும் மும்பையை களமாகக் கொண்டு கதையை எழுதி வைத்துள்ளேன் என்றும் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அதற்கான ஆவணங்களை சமர்பிக்க கேட்டிருந்தனர். அதன்படி படத்தின் கதை திருடியதற்கான முகாந்திரம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தனர். ‘காலா’ படத்திற்கு தடைவித்திக்க மறுத்து உத்தரவிட்டனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement