‘அடப்பாவி... என் குழந்தையை விடுடா’: பெரியப்பாவே வில்லனான கொடூரம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பிரியா நகரை சேர்ந்தவர்கள் ரமேஷ்-புனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியினர். இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவரின் அண்ணன் சுரேஷ் அம்பத்தூரில் வேலை பார்த்து வருகிறார். தம்பி வசிக்கும் வீட்டின் அருகேயே, சுரேஷும் குடும்பத்துடன் வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். பெரியப்பா வீடு என்பதால் அந்தக் குழந்தை, அடிக்கடி அங்கு சென்று விளையாடியுள்ளது. 


Advertisement

ஒரு நாள் (மார்ச் 18) வீட்டில் யாரும் இல்லாமல் சுரேஷ் மட்டும் இருக்கும் நேரத்தில், குழந்தை வந்து விளையாடியுள்ளது. அப்போது சுரேஷ் அதை தம்பியின் குழந்தை, தனக்கும் மகள், 3 வயது பிஞ்சுக் குழந்தை என்றும் பாராமல் இரக்கமின்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது குழந்தையை தூக்கிச்செல்ல எதார்த்தமாக தாய் வந்துள்ளார். சுரேஷின் கொடூரத்தை கண்ட அப்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆத்திரமைடந்த அவர், ‘அடப்பாவி என் குழந்தையை விடுடா’ என்று கத்தியுள்ளார். குழந்தையின் தாயை கண்டதும், சுரேஷ் குழந்தையை விட்டு ஓடி அறையில் புகுந்துகொண்டார். குழந்தையை தூக்கிக்கொண்டு, சுரேஷை கடுமையாக திட்டிச்சென்றுள்ளார் தாய். இதையடுத்து குழந்தையின் தாய் காவல்நிலையம் செல்வதாக கூற, சுரேஷின் குடும்பத்தினர் அவரை தப்பிச்செல்லுமாறு கூறியுள்ளனர். 


Advertisement

குழந்தையின் தாய் புகார் அளித்துவிட்டார். சுரேஷ் தப்பிச்சென்றுவிட்டார். புகாரின் அடிப்படையில் குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சுரேஷை தீவிரமாக தேடி வந்தனர்.


Advertisement

இந்நிலையில் சுரேஷ் திருப்பதியில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் திருப்பதி சென்ற காவலர்கள், அங்கு பதுங்கியிருந்த சுரேஷை வளைத்துப் பிடித்தனர். பின்னர் கைது செய்து, அவர் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

loading...

Advertisement

Advertisement

Advertisement