‘இன்னொரு அனிதாவை பறிகொடுக்கக்கூடாது என அன்றே முடிவெடுத்தேன்’.. ஜி.வி.யின் புதிய முயற்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் பயிற்சி பெற ஏதுவாக மென்செயலி உருவாகி வருவதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Advertisement

மருத்துவ படிப்பு மேற்கொள்ளும் மாணவ- மாணவிகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு +2 பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட காரணத்தினால் மருத்துவம் படிக்க முடியாத வேதனையில் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் பயிற்சி பெற ஏதுவாக மென்செயலி உருவாகி வருவதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Advertisement

அதில், “ நீட் எனும் அரக்கனால் தங்கை அனிதாவை இழந்தோம். அனிதாவின் வீட்டிற்கு சென்றபோது இனி மற்றொரு அனிதாவை நீட்டால் பறிகொடுக்கக்கூடாது என்று தீர்க்கமான முடிவு எடுத்தேன். என் நண்பர்களுடன் பேசி வல்லுநர்கள், ஆசிரியர்களை ஒன்றிணைத்து நீட் தொடர்பாக மூன்று மாதமாக வரைவு திட்டத்தை தயாரித்து தமிழ்வழி, ஆங்கிலவழி மாணவர்கள் இலவசமாக பயன்பெறும் வகையில் மென்செயலி (Mobile Application) உருவாகி வருகிறது. தகுதியான மதிப்பெண்கள் பெற்றிருந்தும், பணம் என்ற ஒற்றை காரணத்தால் எந்த மாணவரும் பாதிப்படையக்கூடாது என்ற அடிப்படையில் எங்களால் முடிந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் இந்த மென்செயலியின் பணி முடிந்து பயன்பாட்டிற்கு வரும். செயலி உருவாக்க உதவும் எனது குழுவினருக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement