இனி திரைப்படத்திற்கு ஏற்ப டிக்கெட் விலை - விஷால்

Actor-Vishal-said-about-Producers-Association-Protest-and-Cinema-Ticket-Rate

தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவது குறித்து நாளை அறிவிக்கப்படும் என அச்சங்கத்தின் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.


Advertisement

கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் திரைத்துறையினர் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் கே.சி.வீரமணி ஆகியோர் தலைமையில் திரைத்துறை அமைப்பினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு திரையரங்க உரிமையாளர்களும், கியூப் நிறுவனத்தினரும் மறுப்பு தெரிவித்து வந்தனர். பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்த நிலையில், டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கு ஆறுமாத அவகாசம் அளிக்கும் வகையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின், தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தம் வாபஸ் தொடர்பாக அறிவிக்கப்படும் என விஷால் தெரிவித்துள்ளார்.


Advertisement

இன்று நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால், ‘ஜூன் 1ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுக்க டிக்கெட் விற்பனையை ஒரே தளத்தில் இயங்கும் வகையில் செய்ய இருக்கிறோம். இனி படங்களுக்கு ஏற்ப டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.  இதுவரை ரூ.9000 வசூலித்த டிஜிட்டல் சேவை கட்டணம், ரூ.5000 ஆக மாற்றப்பட்டுள்ளது. டிக்கெட் கட்டணம் மக்களுக்கு பாரமாக இருக்கக் கூடாது. திரைப்பட வெளியீட்டை முறைப்படுத்தவும் குழு அமைத்துள்ளோம். முதலமைச்சருக்கு நன்றி” என்று கூறினார். 
 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement