கொல்கத்தாவை வீழ்த்தி ஐதராபாத் ஹாட்ரிக் வெற்றி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி வீழ்த்தியது. 


Advertisement

பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா- ஐதராபாத் அணிகள் நேற்று மோதின. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற ஐதராபாத் அணி, பீல்டிங்கை தேர்ந் தெடுத்தது. இதன்படி கொல்கத்தாவின் தொடக்க வீரர்களாக ராபின் உத்தப்பாவும் கிறிஸ் லின்னும் களமிறங்கினர். 
உத்தப்பா 3 ரன்களில் அவுட் ஆக, லின் அதிரடியில் இறங்கினார். அவருடன் கைகோர்த்த நிதீஷ் ராணாவும் பொறுப்பாக விளையாடினார். 

ராணா 18 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்தவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. லின், 34 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஷகிப் அல் ஹசன் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேற, கொல்கத்தா தடுமாறத் தொடங்கியது.  கேப்டன் தினேஷ் கார்த்திக் போராடி 29 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் ஐதராபாத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஐதராபாத்தின் ஃபீல்டிங்கும் நேற்று கச்சிதமாக இருந்தது.  இதையடுத்து அந்த அணி, 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. 


Advertisement

ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், ஸ்டான்லேக் மற்றும் ஷகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சஹாவும் தவானும் அதிரடியில் இறங்கினர். முந்தையை போட்டிகளில் கலக்கிய தவான், வெறும் 7 ரன்னில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து 24 ரன்கள் எடுத்த நிலையும் சஹாவும் அவுட். இவர்கள் விக்கெட்டை சுனில் நரேன் வீழ்த்தினார். அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் பொறுப்பாக ஆடி, 50 ரன்களும் ஷகிப் அல் ஹசன் 27 ரன்களும் யூசுப் பதான் 17 ரன்களும் எடுக்க, அந்த அணி, 19 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது.  கொல்கத்தா தரப்பில் நரேன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


Advertisement

முன்னதாக, மழையால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து மூன்று வெற்றிகளைப் பெற்றுள்ள ஐதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
 

loading...

Advertisement

Advertisement

Advertisement