வெளியானது விவோ ஒய்71: பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விவோ மொபைல் நிறுவனம், ஒய்71 என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.


Advertisement

தற்போதுள்ள இந்திய சந்தைகளில் ஸ்மார்ட்போன் விற்பனைகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது. இதில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக பல மொபைல் நிறுவனங்கள் போட்டி போட்டு, புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. இருப்பினும் இந்திய சந்தைகளில் பட்ஜெட் விலை, கூடுதல் வசதிகளுடன் வெளிவரும் ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெருகின்றன. 


Advertisement

இதனால் பல முன்னணி மொபைல் நிறுவனங்களும் தங்கள் விலை நிர்ணயத்தில் இருந்து, சற்று இறங்கி வந்துள்ளன. ஏனெனில் ஜியோமி, மைக்ரோமேக்ஸ், மோட்டோ போன்ற பல நிறுவனங்கள் குறைந்த விலையில், கூடுதல் வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களிடம் குறிப்பிடத்தகுந்த இடத்தை பிடித்துவிட்டன. இதனால் அடுத்தடுத்த மற்ற நிறுவனங்களும் பட்ஜெட் விலையில், ஸ்மார்ட்போன்களை வெளியிடத் துவங்கிவிட்டன. 

அதன்படி, விவோ நிறுவனம் ஒய்71 என்ற தனது புதிய மாடல் ஸ்மாட்ர்போனை ரூ.10,990 என்ற விலையில் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை இஎம்ஐ மூலம் வாங்கவும், அந்நிறுவனம் வழிவகை செய்துள்ளது. 


Advertisement

சிறப்பம்சங்கள் :

டிஸ்ப்ளே : 6 இன்ச் ஹெச்டி

கேமரா : பின்புறம் 13 எம்பி, செல்ஃபி : 5 எம்பி 

ஆண்ட்ராய்டு : 8.1 ஓரியோ

ரேம் : 3 ஜிபி

இண்டர்நெல் ஸ்டோரேஜ் : 16 ஜிபி

பேட்டரி திறன் : 3360 எம்ஏஎச்

சிம் கார்டு டைப் : 4ஜி வோல்ட்

இவற்றுடன், முகத்தினை ஸ்கேன் செய்து போனை அனலாக் செய்யும் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement