விருதை சிகிச்சை பெறும் நண்பரின் மகனுக்கு அர்ப்பணித்த ரஷித் கான்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தனக்கு கிடைத்த விருதை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நண்பரின் மகனுக்கு சமர்ப்பித்தார் ரஷித் கான்.


Advertisement

ஐபிஎல் தொடரின் 7 வது லீக் போட்டி, ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் மும்பை இண்டியன்ஸ் அணியும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின. இதில் ஐதராபாத் அணி, கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது. மும்பை அணி இரண்டாது தோல்வியை தழுவியது. 

இந்தப் போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி, 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்திய ஐதராபாத் அணியின் ரஷித் கான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 


Advertisement

விருது பெற்ற பின் அவர் பேசும்போது, ‘ ‘டி20 போட்டிகளில் டாட் பால்-களுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. அதனால் திட்டமிட்டு டாட் பால்களை வீசினேன். பேட்ஸ்மேன்களின் பலவீனத்தை அறிந்து சரியான இடத்தில் பந்துவீசி திணறடித் தேன். நான் வீசிய சுழல் மற்றும் கூக்ளி பந்துகள் நன்றாகச் சுழன்றன. இந்த ஐபிஎல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீர்ர்கள் சிலர் விளையாடுகிறார்கள். நான், முஜீப், நபி ஆகியோர் விளையாடி வருகிறோம். ஒவ்வொரு போட்டியிலும் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவளிக்கிறார்கள். மக்களுக்கு விளையாட்டை தவிர வேறொன்றும் அதிக மகிழ்ச்சியைத் தந்துவிடாது. இன்றைய போட்டியில் மேன் ஆப் த மேட் விருது கிடைத்தது. இதை மருத்துவமனையில் இருக்கும் எனது நண்பனின் மகனுக்கு சமர்பிக்கிறேன்’ என்றார். 

ரோகித் சர்மா கூறும்போது, ‘சரியான போட்டி இது. இருந்தாலும் இரண்டாவது முறையாக தோற்றதை ஜீரணிக்க முடிய வில்லை. நாங்கள் எடுத்த ஸ்கோர் குறைவு. இன்னும் அதிக ரன்கள் எடுத்திருக்க வேண்டும். இனி பொறுப்பாக பேட்டிங் செய்ய வேண்டும். அடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோம்’ என்றார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement