மோடி சென்னை வருகை: 5 ஆயிரம் போலீஸார் குவிப்பு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரதமர் மோடி நாளை சென்னை வருவதை ஒட்டி ஐந்தாயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.


Advertisement

சென்னை அருகே திருவிடந்தையில் ராணுவ கண்காட்சியை பிரதமர் மோடி நாளை முறைப்படி தொடங்கிவைக்க உள்ளார். மேலும் அடையார் புற்றுநோய் மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார். இதையொட்டி சென்னையில் ஐந்தாயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த பாதுகாப்பு பணியில் கமாண்டோ‌ படையினர் மற்றும் அதிரடி படையினரும் ஆகியோரும் ஈடுபட உள்ளனர். 

மேலும் விமான நிலையம் முதல் ஐஐடி, அடையார் புற்றுநோய் மையம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்ற‌ன. ஆலந்தூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என தெரியவந்துள்ளது. இதற்கிடையில் பிரதமர் மோடி சென்னை ஐஐடியில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement