விளையாட்டை ரசிக்க போறியா? தவிர்க்க போறியா? - ஜிவி பிரகாஷ் கேள்வி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா? என நடிகர் ஜி.வி. பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.


Advertisement

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. ஆனால் திட்டமிட்டபடி போட்டிகள் சென்னையில் நடைபெறும் என ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். அதன்படியே ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நாளை ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது.


Advertisement

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜி.வி. பிரகாஷ், “அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா..? சுதந்திரமா உன் கருத்தை சொல்ல முடியலன்னா விளையாட்டை தவிர்க்க போறியா..? தடைய தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க சொல்லப்போறியா..?” என்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement