திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் தனது தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது, நாள்தோறும் திருடு போவதால் ஆத்திரமடைந்த ஒருவர், திருடிய நபரை விஷம் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கோட்டைபட்டியைச் சேர்ந்த தீபன் என்பவர் திருச்சி எல்லையில் துவரங்குறிச்சியில் தனது தோட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்துள்ளார். இதை அறிந்த சிலர், அங்கிருந்து மது பாட்டில்களை நாள்தோறும் திருடி அருந்தி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தீபன், விஷம் கலந்த மதுவை தோட்டத்தில் பதுக்கி வைத்துள்ளார். இதை அறியாத சின்னழகு என்பவர், வழக்கம்போல் அதைத் திருடி வீட்டில் சென்று குடித்துள்ளார். அதை குடிக்கும்போதே வாயில் நுரை தள்ளி சின்னழகு பரிதாபமாக உயிரிழந்தார். சாகும் தருணத்தில், தீபனின் தோட்டத்தில் இருந்து மதுவை திருடி அருந்தியதை சின்னழகு தெரிவித்துள்ளார். இதன்பேரில், காவல்துறையினர் தீபனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
"முழு முடக்கத்தை தடுக்க முடியும்!" - நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி உறுதி
கொரோனா 2-ம் அலை தீவிரம்: நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி!
'கொரோனா சூழல்... அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானவை' - நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர்
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்