உ.பி-யில் ஆட்சியமைக்கிறது பாரதிய ஜனதா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் அக்கட்சி 300க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிமுகத்தில் உள்ளது.


Advertisement

உத்தரப்பிரதேசத்தில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்தது. நேரம் செல்ல செல்ல பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில், பாரதிய ஜனதா கட்சி 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றது. கடைசி நிமிட கூட்டணி அமைத்த சமாஜ்வாதி - காங்கிரஸ் கட்சிகள், 60 முதல் 70 இடங்கள் வரை மட்டுமே முன்னிலை பெற்றது. சட்டப்பேரவையில் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்த பகுஜன் சமாஜ் கட்சி, 19 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. 15 ஆண்டுகளுக்குப் பின் உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜ‌னதா ஆட்சியமைவதால் அக்கட்சி தொண்டர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்‌டுள்ளனர்.


Advertisement
loading...
Related Tags :

Advertisement

Advertisement

Advertisement