ஐ.பி.எல்: அழகிலும், அறிவிலும் அசத்தும் தொகுப்பாளர்கள் !

ஐ.பி.எல்: அழகிலும், அறிவிலும் அசத்தும் தொகுப்பாளர்கள் !
ஐ.பி.எல்: அழகிலும், அறிவிலும் அசத்தும் தொகுப்பாளர்கள் !

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் எப்போது விளையாட்டு திருவிழாவாக மாறியதோ, அப்போதே "மசாலா" திரைப்படம் போல பல அம்சங்களை கொண்டதாக மாறியது. அதில் முக்கியமான விஷயம் 'கிளாமர்'. கடந்த 10 ஆண்டுகளாக ஐ.பி.எல். போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையை சோனி நிறுவனம்தான் வைத்திருந்தது. இந்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல். உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெரும் தொகை கொடுத்து பெற்றுள்ளது. எனவே இந்தாண்டு கிளாமர் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு ஐ.பி.எல்.லை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.

அர்ச்சனா விஜயா

மகராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்தவர் அர்ச்சனா விஜயா. அடிப்படையில் மாடலான இவர் 2011 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் போட்டிகளை தொகுத்து வழங்குகிறார். சில விளம்பரங்களில் நடித்து வரும் அர்ச்சனா, ஐ.பி.எல். போட்டிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலமானார். 

ஷிபானி தண்டேகர்

புனே நகரைச் சேர்ந்த இவர் அடிப்படையில் மேடை நாடகக் கலைஞர். இவர் பாடகியும் கூட. பல்வேறு இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளார். மேலும் சர்வதேச ஃபேஷன் பத்திரிகைகளின் அட்டைப்படங்களை அலங்கரித்ததன் மூலம் ஐ.பி.எல். தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஐ.பி.எல். போட்டிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

ரோச்சல் ராவ்

சென்னையை சேர்ந்தவர். சரளமாக தமிழ், இந்தி, ஆங்கிலம் என பேசக் கூடியவர். 2016 ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி, 2012 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் பட்டங்களை வென்றவர். 2015 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல். போட்டிகளை தொகுத்து வழங்குகிறார். ரோச்சலின் வர்ணனையை இனி தமிழிலும் கேட்கலாம்.

பல்லவி ஷர்தா

பாலிவுட்டில் 'மை நேம் இஸ் கான்', 'லவ் பிரேக் அப் ஜிந்தகி' படத்தில் நடித்தவர். ஆஸ்திரேலியா வாழ் இந்தியரான இவரை ஐ.பி.எல். போட்டி தொகுப்பாளர்களில் ஒருவராக, இணைத்துள்ளது ஸ்டார் ஸ்போர்ட்ஸ். பாலிவுட்டில் வலம் வந்த பல்லவி, இனி தினமும் தொலைக்காட்சியில் வலம் வருவார் என எதிர்பார்க்கலாம்.

இஷா தாரா குஹா

இங்கிலாந்து குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளி பெண். இதுவரை 83 ஒரு நாள் போட்டிகளிலும், 22, டி20 போட்டிகளிலும் களம் கண்டுள்ளார். முழு நேர நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறியுள்ள இஷா, 2016 ஆம் ஆண்டில் இருந்து ஐ.பி.எல். போட்டி வர்ணையாளர் மற்றும் போட்டி தொகுப்பாளராக வலம் வருகிறார்.

மயாந்தி லாங்கர்

அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளையும் துல்லியமாக தொகுத்து வழங்கும் திறமை கொண்டவர். கால்பந்து, அத்லெட்டிக்ஸ், டென்னிஸ், கிரிக்கெட், பாட்மின்டன் என விளையாட்டுகள் குறித்த அலசலையும் திறம்பட செய்யக் கூடியவர். இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஸ்டூவர்ட் பின்னியின், மனைவியான இவர், கிளாமரில் கிறங்கடிக்க கூடியவர். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான தொகுப்பாளனரான இவரை இந்தாண்டும் தரிசிக்கலாம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com