சொன்னபடி உஷா குடும்பத்திற்கு 10 லட்சம் தந்த கமல்ஹாசன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டத்திற்கு சென்றுள்ள கமல்ஹாசன் உஷா குடும்பத்தினரை இன்று சந்தித்தார்.


Advertisement

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் கடந்த மாதம் 7ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினரை காவல் ஆய்வாளர் காமராஜ் உதைத்ததில் உஷா என்ற பெண் படுகாயமடைந்து உயிரிழந்தார். இந்த நிலையில் அடுத்த நாள் சென்னை ராயப்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் நடந்த மகளிர் தின விழா விழாவில் பேசிய கமல்ஹாசன், திருச்சியில் உயிர் இழந்த உஷாவின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் வழங்கபடும் என அறிவித்து இருந்தார். இந்த நிலையில் திருச்சியில் இன்று நடக்கும் பொது கூட்டத்திற்கு நேற்று இரயில் மூலம் திருச்சி சென்ற அவர் மோட்டார் பைக் விபத்தில் மரணமடைந்த உஷாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், தான் ஏற்கனவே அறிவித்தபடி 10 லட்ச ரூபாய் நிதியுதவியையும் வழங்கினார். அப்போது உயிரிழந்த உஷாவின் கணவரும், உஷாவின் தாய் மற்றும் சகோதரரர் உடன் இருந்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement